இந்தியன் 2 விபத்து..! ஒரு கோடி நிதியுதவி..! இயக்குநர் ஷங்கர் அறிவிப்பு..!

438

இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெற்ற போது, கிரேன் விழுந்து கொடூர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், 3 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து பல்வேறு நடிகர்கள் இரங்கலை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நடிகர் ஷங்கரிடம் குற்றப்பிரிவு போலீசார், 3 மணி நேரம் போராட்டம் நடத்தினர். இதையடுத்து இயக்குநர் ஷங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

மேலும், அவர்களுக்கு எந்த உதவி செய்தாலும் ஈடாகாது என்று தெரிவித்த அவர், ஒரு கோடி ரூபாயை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அளிக்கிறேன் என்று தெரிவித்தார். அவர்கள் இந்த துயரத்திலிருந்து விரைவில் மீள வேண்டுமென்று மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறேன் என்றும் ஷங்கர் அந்த அறிக்கையில் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of