அஜித்குமாரை அரசியலுக்கு இழுக்கும் பிரபல இயக்குநர்!

118

நடிகர் அஜித்குமாரை அரசியலுக்கு வர சொல்லி பிரபல இயக்குநர் சுசீந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்ட அவர்,

“40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும்.

தமிழக மக்களின் நலன்கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100 சதவீத சரியான தருணம்.

வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு. உங்களுக்காக காத்திருக்கும் பலகோடி மக்களில் நானும் ஒருவன்”

என அஜித்துக்கு இயக்குனர் சுசீந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் வறுமையை உணர்ந்தவனால் மட்டுமே மக்களின் தலைவனாக முடியும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.