நடைப்பயிற்சி செய்த சுசீந்திரன் – எதிர்பாராமல் மோதிய வாகனம்

261

தமிழில் 2009ம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற ஒரு சிறந்த படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் தான் சுசீந்திரன். இவர் இயக்கத்தில் வெளியான ‘நான் மகான் அல்ல’ திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. மிக குறுகிய காலகட்டத்தில் நல்ல இயக்குனர் என்ற பெயரை பெற்றவர்.

அண்மையில் வெளியான கென்னடி கிளப் என்ற படத்தின் மூலம் இயக்குனர் இமயம் பாரதிராஜாவை இயக்கிய பெருமையை பெற்றார். இந்நிலையில் இன்று காலை இயக்குனர் சுசீந்தரன் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஒரு வாகனத்தால் மோதபட்டு கீழே விழுந்தார்.

suseendiran

இந்த விபத்தில் சுசீந்திரன் அவர்களின் கை எலும்பில் முறிவு ஏற்பட்டது. அவர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கே அவருக்கு எலும்பு முறிவுக்கான லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரை மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of