“சிம்புவை வளர்க்க வேண்டாம்..” – வெங்கட் பிரபுவின் டுவீட்டால் பரபரப்பு..!

1268

சர்ச்சைகளுக்கு பேர் போனவர் சிம்பு. இவர் லேட்டாக ஷீட்டுக்கு வருகிறார், சில வராமல் தவிர்க்கிறார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வந்தது. இதனை தீர்க்கும் விதமாக, சிம்பு தொடர்ச்சியாக படங்களை கொடுத்தார்.

செக்கச் சிவந்த வானம், வந்தா ராஜாவா தான் வருவேன் என்று தொடர்ந்து படங்களை அவர் கொடுத்து வந்த நிலையில், மாநாடு என்ற படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியது.

தகவல் வெளியாகி 2 வருடமாகியும் ஷுட்டுக்கு அவர் வராததால், சிம்புவை அந்த படத்திலிருந்து நீக்கி படத்தின் தயாரிப்பாளர் அறிவித்தார். இந்நிலையில் வெங்கட் பிரபு சுதந்திர தினத்தையொட்டி டுவிட்டரில் ஒரு டுவீட் செய்துள்ளார்.

அதில், வம்பை வளர்க்காமல், அன்மை வளர்ப்போம் என்று தெரிவித்துள்ளார். இதனைப்பார்த்த நெட்டிசன்கள், வம்பு என்றால் சிம்பு, அன்பு என்றால் தனுஷ். அதாவது வடசென்னை படத்தில் தனுஷ் பெயர் அன்பு.

 

சிம்புவை வளர்க்காமல், தனுசை வளர்க்க வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.