“அதை மட்டும் பண்ணிடாதிங்க.. வழக்கு தொடர்வேன்..” தனுஷை பயமுறுத்திய விசு..!

452

1981-ஆம் ஆண்டு வெளியான நெற்றிக்கண் என்ற திரைப்படம், அப்போதைக்கு மாபெரும் வெற்றியடைந்தது. ஒரு முதியவர் ஒரு பெண்ணை கற்பழித்து விடுகிறார். ஆனால், அதே பெண்ணை அந்த முதியவரின் மகன் திருமணம் செய்துக்கொள்கிறார்.

இதற்கிடையில் நடக்கும் சம்பவங்களே, அந்த படத்தின் மீதிக்கதை. 80-களில் மிகவும் வித்யாசமான கதையம்சத்துடன் வெளியான இந்த திரைப்படம், ரஜினியின் பெஞ்ச் மார்க் வரிசைகளில் ஒன்று.

இந்த திரைப்படத்தை ரீமேக் செய்ய இருப்பதாக நடிகர் தனுஷ் அவ்வப்போது கூறி வருகிறார். இந்நிலையில் நெற்றிக்கண் படத்தை தனது அனுமதி இல்லாமல் ரீமேக் செய்யக் கூடாது என்று டைரக்டர் விசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசும்போது, நெற்றிக்கண் படத்தை தனுஷ் ரீமேக் செய்வதாக இருந்தால், படத்தின் கதாசிரியரான தன்னிடம் உரிமம் பெற வேண்டும் என்றும், அவ்வாறு உரிமம் பெறாமல் படம் எடுக்கத் தொடங்கினால் வழக்கு தொடர்வேன் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of