காவலன் செயலி இருந்தால் தள்ளுபடி..! பெரும் வரவேற்பு தந்த பெண்கள் ..!

520

தொழில் நகரமான திருப்பூரில், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தோர் அதிகளவில் வந்து பணி புரிந்து வரும் நிலையில், அங்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனை தடுக்கும் விதமாக, திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார், மாநகராட்சி பூங்காவிற்கு வந்த பெண்களிடம் காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதுமட்டுமில்லாமல் அச்செயலி இல்லாதவர்களிடம், கைப்பேசியை வாங்கி காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து தந்தனர்.

மேலும், கைப்பேசியில் காவலன் செயலியை வைத்திருப்போருக்கு மாநகராட்சி பூங்காவிற்கான அனுமதி கட்டணம் மற்றும் உணவு ஆகியவற்றில் சிறப்பு தள்ளுபடி செய்யப்பட்டது, பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

Advertisement