புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடிச்சது ஐன்ஸ்டீன்..? – மத்திய அமைச்சரின் உளறல் பேச்சால் டிரெண்டாகும் நியூட்டன் – ஐன்ஸ்டீன்..!

846

2019-ல் ஐன்ஸ்டீனும், நியூட்டனும் ஒரே நாளில் இந்திய அளவில் நம்பர் #1, நம்பர் #2 டிரெண்டிங்கில் இருப்பார்கள் என யார் நினைத்திருப்பார்கள்?

ஆனால், இப்போது அதுதான் அப்படியே டுவிட்டரில் நடந்துகொண்டிருக்கிறது. சந்திரயான் 2 போன்ற சிறப்பு நிகழ்வுகள்தாண்டி பெரிதாக அறிவியல் பற்றிய பேச்சு எடுக்காத ட்விட்டர்வாசிகள் ஒரே நேரத்தில் இருபெரும் அறிவியல் மேதைகளை டிரெண்ட் செய்வது ஏன் தெரியுமா?

‘அது என்னோட பவரால எரியல, எவனோ செஞ்ச தவறால எரியுது’ என்பது போல இதற்கு காரணம் ஒரு அமைச்சரின் பேச்சுதான். பொருளாதார மந்தநிலை பற்றிப் பேசுகையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், `புவி ஈர்ப்புவிசை என்று ஒன்று இருப்பதை கண்டுபிடிக்க ஐன்ஸ்டீனுக்கு கணிதமா உதவியது?’ என்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார் அவர்.

பொருளாதார வளர்ச்சியை எண்களை வைத்து தீர்மானித்துவிட முடியாது என்பதை எடுத்துரைக்கவே இதைக் கூறியுள்ளார் அவர். புவிஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தது நியூட்டனாக இருக்க இவர் ஐன்ஸ்டீன் எனக் கூறியது டுவிட்டரை அலறவிட்டுள்ளது. இப்படி அரசியல்வாதிகள் உளறுவது வழக்கம்தான்.

இதேபோல் பொருளாதார மந்தநிலை பற்றி நிர்மலா சீதாராமன் பேசியதும் வைரலானது. “இன்றைய இளைஞர்கள் ஓலா, ஊபர் பயன்படுத்துவதால்தான் மோட்டர் வாகன விற்பனை குறைந்திருக்கிறது” என அவர் பேசியிருந்தார்.

 

பொருளாதார மந்தநிலை பற்றிக் கேட்டால் மொத்த பா.ஜ.கவுமே இப்படிதான் எதாவது பேசி சமாளிக்கிறது என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அதன் ஒரு வெளிப்பாடுதான் இந்த நியூட்டன், ஐன்ஸ்டீன் ட்ரெண்டிங் பார்க்கப்படுகிறது.

Advertisement