திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.அழகிரி விவகாரம் குறித்து விவாதம்

736

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இடைத்தேர்தல் மற்றும் மு.க.அழகிரி விவகாரம் குறித்து விவாதிக்கப்படுகிறது.
vovt
சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது. பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.

மாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்கள் குறித்தும், மக்களவைத் தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

மேலும் மக்களவைத் தேர்தல் நெருங்குவதால், தேர்தல் நிதி திரட்டுமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisement