சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பதவியை பறிக்க வேண்டும் – எதிர்கட்சிகள் வலியுறுத்தல்

434

சி.பி.ஐ. சோதனையை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பதவியை பறிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில் குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். பதவியில் உள்ள ஒரு அமைச்சர் வீட்டில் இரண்டு முறை சோதனை நடத்தப்பட்டது இதுவே முதல் முறை என்பதால், அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of