தேர்தல் தொடர்பாக , நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

164

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில், அக்கட்யின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக வரும் டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான விருப்பு மனு நாளை முதல் விநியோகிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் கூட்டம்  நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of