தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்

972

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% போனஸூம், நஷ்டத்தில் செயல்படும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸூம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார வாரியம், அரசு போக்குவரத்து கழகம், நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவன ஊழயர்களுக்கும் 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும் C மற்றும் D பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவித விழுக்காடு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிரந்தர தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக 8,400 ரூபாயும், அதிகபட்சமாக 16,800 ரூபாயும் பெறுவார்கள் என்றும், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 58 ஆயிரத்து 330 தொழிலாளர்களுக்கு 486 கோடியே 92 லட்சம் ரூபாய் போனாஸாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of