தீபாவளி பண்டிகையையொட்டி 22 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயங்கப்படும்

835

தீபாவளி பண்டிகையையொட்டி 22 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக 22 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

நவம்பர் 3, 4 மற்றும் 5ஆம் தேதிகளில் 12 ஆயிரம் பேருந்துகளும், பண்டிகை முடிந்த பின்னர் மீதமுள்ள 10 ஆயிரம் பேருந்துகள் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் என தெரிவித்தார்.

சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், அடையாறு, அண்ணாநகர், ஊரப்பாக்கம் என 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். கடந்த வருடம் தீபாவளிக்காக 21 ஆயிரத்து 289 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement