மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடையில் விஜயகாந்த், ஜி.கே.வாசன் புகைப்படம் – தேமுதிக கூட்டணி உறுதி?

197

அதிமுக – பாஜக கூட்டணியில் தேமுதிக கூட்டணி உறுதியாகியுள்ளதாக தெரிகிறது.

மோடி வருகை தரும் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் புகைப்படத்துடன்  விஜயகாந்தின் புகைப்படமும் தற்பொழுது இடம்பெற்றுள்ளதையடுத்து அதிமுக வுடனான கூட்டணி உறுதியாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதே போன்று ஜி.கே வாசனின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளதால் தமிழ் மா நில காங்கிரஸும் அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது என தெரிகிறது.