இது தான் நமக்கு சரியா வரும் – கூட்டணியை உறுதி செய்யும் விஜயகாந்த்

785

லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் முக்கிய முடிவை எடுத்துவிட்டார் என்று செய்திகள் வருகிறது.

லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் முக்கிய முடிவை எடுத்துவிட்டார் என்று செய்திகள் வருகிறது.

கடந்த மூன்று வாரமாக இந்த கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. லோக்சபா தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்பதுதான் பெரிய கேள்வியாக இருக்கிறது.

திமுக கூட்டணியா, தேமுதிக கூட்டணியா, மூன்றாவது அணியா என்ற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. இது தொடர்பாக தேமுதிக நிறைய பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதில் தேமுதிக கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை. அதிமுக கூட்டணியில் பாமக போலவே தேமுதிக 7 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்ய சபா சீட் கேட்டது. ஆனால் அதிமுக இதற்கு கடுமையாக மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனால் கூட்டணி பேரம் படியாமல் இருந்தது.


திமுகவிடமும், தேமுதிக இதேபோல் பேச்சுவார்த்தை நடத்தியது . ஆனால் திமுகவிடம் தேமுதிக மொத்தம் 7+1 இடங்களை கேட்டது. ஆனால் திமுக 5 இடங்களுக்கு அதிகமாக கொடுக்க முடியாது என்று கூறி இருக்கிறது. இதனால் திமுக – தேமுதிக கூட்டணியும் உறுதியாகாமல் போனது.

இதையடுத்து அதிமுக தொடர்ந்து தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. தேமுதிகவை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வர அதிமுக படாதபாடுபட்டது. இந்த நிலையில் தேமுதிக பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து கொஞ்சம் இறங்கி வந்து இருப்பதாக செய்திகள் வருகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், லோக்சபா கூட்டணி குறித்து முக்கிய முடிவை எடுத்துவிட்டார் என்று கூறுகிறார்கள். அதிமுகவுடன் தேமுதிக சேர்வது உறுதியாகிவிட்டது. இன்னும் இரண்டு தினங்களில் அந்த அறிவிப்பு வெளியாகிவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி தேமுதிக மொத்தம் 5 லோக்சபா இடங்களை பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதேபோல் 1 ராஜ்யசபா இடத்தையும் தேமுதிக பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. வடமாவட்டங்களில் இருக்கும் சில 5 தொகுதிகள் தேமுதிக கட்சிக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of