பாஜகவுடன் தேமுதிக கூட்டணி? – எல்.கே.சுதிஷ் பதில்

714

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் அங்கம் வகிக்கும் என்று ஏறத்தாழ தெரிந்துவிட்ட நிலையில், அதிமுக கூட்டணி தொடர்பாக இன்னும் தெளிவான முடிவு எட்டப்படவில்லை என தெரிகிறது. ஆனால் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தேமுதிக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக தேமுதிக துணைப்பொதுச்செயலாளர் எல்.கே.சுதிஷ் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தேமுதிக பாஜகவுடன் கூட்டணி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வந்த செய்தி உண்மைதான் எனவும் விஜயகாந்த் வந்ததும்  முறையான அறிவிப்பு வெளியாகும் என எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.