தேமுதிக- அதிமுக கூட்டணி.., துரைமுருகனின் நகைச்சுவை பதில்

901

சென்னை கோட்டூர் புரத்தில் இன்று திமுக பொருளாளர் துரைமுருகனுடன் தேமுதிக மூத்த நிர்வாகிகளான முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசன், இளங்கோவன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பேசினர்.

இது குறித்து துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில்,

அதிமுக-வுடன் கூட்டணியில் சேர விரும்பவில்லை என தேமுதிக நிர்வாகிகள் என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தினர், இதில் முதலில் சுதீஷ் தொலைபேசியில் பேசி திமுக கூட்டணியில் சேர விரும்புவதாக தெரிவித்தார். அதிமுக கூட்டணியிலிருந்து விலகி திமுக அணிக்கு வர விரும்புவதாக கூறினார்.

இதற்கு பதிலளித்த துரைமுருகன் தேமுதிக இணைந்தால் கொடுப்பதற்கு எங்களிடம் போதிய சீட் இல்லை தருவதற்கு, மன்னிக்கவும் என சுதீஷிடம் கூறிவிட்டேன்.

இதனைத்தொடர்ந்து, தேமுதிக நிர்வாகிகள் சந்தித்தது குறித்து மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நான் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன், அவர் தூங்குகிறாராம். அவரை தொந்தரவு செய்யும் அளவுக்கு அவசியமில்லை என விட்டுவிட்டேன் என சற்று நகைச்சுவையாக பதிலளித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of