விஜயகாந்த தேர்தல் பிரசாரம் குறித்த அறிவிப்பு 2 நாளில் வரும்- பிரேமலதா

852

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். முன்னதாக அவர், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தமிழகத்தில் உள்ள எல்லா தொகுதிகளுக்கும் சென்று உள்ளேன். பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 40 தொகுதிகளையும் வெற்றியை தாங்கள் அடைந்து காட்டுவோம். கடைசியாக வடசென்னையில் பிரசாரத்தை முடிக்க உள்ளோம்.

கருத்து கணிப்பு என்பது வெறும் மற்றவரின் கருத்துகளை திணிப்பதாகும். உறுதியாக 40 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். வருமான வரி சோதனை உள்பட பல இடங்களில் பல சம்பவங்கள் நடக்கின்றன. இதில் சட்டம் தனது கடமையை செய்யும். எதிர்க்கட்சிகள் என்பதால் சோதனைகள் மூலம் யாரையும் பழிவாங்கவில்லை. சட்டம் தன் கடமையை செய்கிறது.

என்னுடைய பிரசாரம் எப்போதும் இப்படித்தான் இருக்கும். ஜெயலலிதா இல்லாததால் எல்லோரும் என்னுடைய பிரசாரத்தை கவனிப்பதால் அவருடன் ஒப்பிட்டு பார்க்கின்றனர்.

கடந்த காலத்தில் நடந்த பிரசாரங்களும் இதுபோல் தான் இருந்தன. எனக்கு என்று ஒரு பாணி உள்ளது. மேலும், விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்துக்கு வருவார். இன்னும் 2 நாளில் அதற்கான அறிவிப்பு வரும் என தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of