தண்ணீர் தட்டுப்பாட்டைத் தீர்க்க கேப்டன் சொன்ன “நச்” ஐடியா..!

508

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடிக்கொண்டிருக்கிறது. இதனைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் குறைந்தபாடில்லை என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தேமுதிக-வின் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-

“மழைக்காலம் தொடங்கி இருக்கும் இந்த நேரத்தில் தமிழக அரசு உடனடியாக நீர் நிலைகளை தூர்வார அதிக கவனம் செலுத்தி மழை நீரை சேமிக்க அக்கறை காட்ட வேண்டும்.

மேலும் பல கோடி ரூபாய் மழைநீர் சேமிப்புக்காகவும், தடுப்பணைகள் அமைப்பதற்காகவும் தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி இருக்கும் இந்த அரசு, மழைக்காலம் தொடங்கி இருக்கின்ற இந்த நேரத்தில் உடனடியாக ஏரிகளை தூர் வாரி தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடே இல்லை என்கின்ற நிலையை வரும் காலங்களில் உருவாக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.