கூட்டணி வாய்ப்பை இழந்த தேமுதிக?

499

அதிமுக-வுடனான தொகுதி பங்கீட்டில் நீட்டகாலமாக இழுபறி நீடித்த நிலையில், இன்று மோடி வருகை தரும் அதிமுக பொதுக்கூட்டதில் கூட்டணி கட்சிகளின் புகைப்படத்துடன் விஜயகாந்த் புகைப்படமும் இருந்தது, ஆனால் திடீரென விஜயகாந்த் புகைப்படத்தை நீக்கினர்.அதிமுக கூட்டணியை தேமுதிக நிராகரித்துள்ள நிலையில், திமுகவும் தேமுதிகவை நிராகரித்துள்ளது. தேமுதிகவுக்கு வழங்க சீட் இல்லை என சுதீஷிடம் கூறிவிட்டதாக திமுக தொகுதி பங்கீடு குழு தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார்.

ஸ்டாலின் விருதுநகர் சென்றிருப்பதால் இதற்கு மேல் தன்னால் எதுவும் கூற முடியாது என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லாத வேளையில் திரிசங்கு நிலையில் தேமுதிக உள்ளது. வேண்டுமென்றால் திமுக கூட்டணியில் இணைய தேமுதிக தொடர்ந்து முயற்சி செய்தால் பரிசீலிப்போம் என துரைமுருகன் கூறியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of