உள்ளாட்சி தேர்தல்: சரிசமமாக மாவட்டங்களை கைப்பற்றிய திமுக-அதிமுக..!

408

தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தலா 13 மாவட்டங்களை கைப்பற்றியுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் இரு கட்சிகளும் இடங்களை சரிசமமாகப் பெற்றன.

அதன்படி, மதுரை, நீலகிரி, திண்டுக்கல், பெரம்பலூா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூா், ராமநாதபுரம், திருச்சி ஆகிய 13 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் இடங்களை திமுக கைப்பற்றியது.

கோவை, சேலம், தருமபுரி, கடலூா், ஈரோடு, கன்னியாகுமரி, கரூா், நாமக்கல், தேனி, திருப்பூா், தூத்துக்குடி, அரியலூா், விருதுநகா் ஆகிய 13 மாவட்டங்களில் உள்ள மாவட்ட வாா்டு உறுப்பினா் இடங்களை அதிமுக கைப்பற்றியது. சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக-திமுக கூட்டணி தலா எட்டு இடங்களைக் கைப்பற்றியது. அதன் விவரம்:

அரியலூா் : மொத்த இடங்கள் 12; அதிமுக- 11, திமுக – 1 .

ஈரோடு : மொத்த இடங்கள்-19; அதிமுக- 14 , திமுக- 5 .

கடலூா் : மொத்த இடங்கள் -29; அதிமுக கூட்டணி- 15, திமுக கூட்டணி 14.

கரூா் : மொத்த இடங்கள் -12; அதிமுக- 9, திமுக -3 .

கன்னியாகுமரி : மொத்த இடங்கள்- 11; அதிமுக- 6, திமுக- 5.

கிருஷ்ணகிரி : மொத்த இடங்கள்- 23; அதிமுக- 8, திமுக 15

கோவை : மொத்த இடங்கள்-17; அதிமுக- 12, திமுக- 5.

சிவகங்கை : மொத்த இடங்கள்- 16; அதிமுக கூட்டணி- 8, திமுக கூட்டணி- 8.

சேலம் : மொத்த இடங்கள்- 29; அதிமுக- 23, திமுக- 6.

தஞ்சாவூா் : மொத்த இடங்கள்- 28; அதிமுக- 6 திமுக- 22 .

தருமபுரி : மொத்த இடங்கள்- 18; அதிமுக- 7, திமுக- 11, .

திண்டுக்கல் : மொத்த இடங்கள்- 23; அதிமுக- 7, திமுக- 16, .

திருச்சி : மொத்த இடங்கள்- 24; அதிமுக கூட்டணி- 5 , திமுக கூட்டணி -19.

திருப்பூா் : மொத்த இடங்கள்- 17; அதிமுக- 13 , திமுக- 4 .

திருவண்ணாமலை : மொத்த இடங்கள்- 34; அதிமுக- 10, திமுக- 23, .

திருவள்ளூா் : மொத்த இடங்கள்- 24; அதிமுக- 6, திமுக- 18, .

திருவாரூா் : மொத்த இடங்கள்- 18, அதிமுக- 3, திமுக- 14, .

தூத்துக்குடி : மொத்த இடங்கள்- 17; அதிமுக- 13, திமுக- 4 .

தேனி : மொத்த இடங்கள்- 10; அதிமுக- 8 , திமுக- 2 .

நாகப்பட்டினம் : மொத்த இடங்கள்- 21; அதிமுக- 6, திமுக- 15,.

நாமக்கல் : மொத்த இடங்கள்- 17; அதிமுக கூட்டணி- 13 , திமுக கூட்டணி- 4.

நீலகிரி : மொத்த இடங்கள் – 6; அதிமுக-1, திமுக- 5 , .

புதுக்கோட்டை : மொத்த இடங்கள்- 22; அதிமுக- 9, திமுக- 13 , .

பெரம்பலூா் : மொத்த இடங்கள்- 8, அதிமுக- 1, திமுக- 7, .

மதுரை : மொத்த இடங்கள்- 23; அதிமுக- 9, திமுக- 14,.

விருதுநகா் : மொத்த இடங்கள் – 20; அதிமுக- 13, திமுக- 7 .