கூட்டணி கட்சிகளை காக்க வைக்கும் ஸ்டாலின் – சீட் கிடைக்குமா?

770

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை நடத்த தோழமைக் கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள நிலையில், இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை ஸ்டாலி

ன் காத்திருக்க வைத்திருப்பது ஏன் என்ற கேள்வி ஒரு பக்கம் எழுந்து வருகிறது.
புதுச்சேரி உட்பட காங்கிரசுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மதிமுகவுக்கு மூன்று இடங்களும் விசிக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு இடங்களும், மனித நேய மக்கள் கட்சிக்கு ஒரு இடமும் வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் மனித நேய மக்கள் கட்சிக்குள் கருத்து வேறுபாடு இருப்பதால் திமுக தொகுதி கொடுப்பதில் தயங்குவதாகவும் தகவல்கள் வருகின்றன.

அதுமட்டுமின்றி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் தான் மனிதநேய மக்கள் கட்சிக்கு சீட் என திமுக தரப்பில் நிபந்தனைகள் வைக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு முடிந்துள்ளதால் அந்த கட்சியின் பிரச்சார வேலைகளை தொடங்கிவிட்டன.

அதன்படி வருகிற 6ம் தேதி வண்டலூரில் நடைபெற உள்ள பிரம்மாண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

அதேபோல் திமுக கூட்டணியும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளது. அந்த வகையில், வருகிற 13ம் தேதி காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement