திமுக-காங்கிரஸின் விளம்பரங்கள் வெளியிட தடை! தேர்தல் ஆணையம் அதிரடி!

545

திமுக – காங்கிரஸ் கட்சிகளின் காட்சி விளம்பரங்கள் தொடர்பான புகார் மனுக்களை அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபுமுருகவேல் திங்கள்கிழமை அளித்தார்.

இதைத் தொடர்ந்து, காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளின் தலா ஒரு காட்சி விளம்பரங்களுக்குத் தடை விதித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபுமுருகவேல் அளித்த மனுவில், விவசாயி இறந்து போனது போன்று அவரின் உடலை வைத்து தேர்தல் விதிகளுக்கு மாறாக மக்களிடையே அச்ச உணர்வைத் தூண்டும் வகையில் காங்கிரஸ் காட்சி விளம்பரம் வெளியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று மதங்களை அடையாளப்படுத்தும் வகையில் மதச் சின்னங்களை அணிந்த 3 நபர்கள் ஒருவரை ஒருவர் வன்மத்துடன் பார்ப்பது போன்று திமுக காட்சி விளம்பரம் வெளியிடுகிறது. இதற்கும் தடை விதிக்க வேண்டுமென மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை ஏற்றுக் கொண்ட தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, அதிமுக குறிப்பிட்ட இரண்டு விளம்பரங்களையும் காட்சி ஊடகங்கள் வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் இன்றுடன் தேர்தல் பிரசாரங்கள் ஓய்வு பெறும் நிலையில், கட்சிகளின் தேர்தல் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of