குடிநீர் பிரச்சனைக்காக ஜூன் 22 முதல் போராட்டம் – திமுக

340

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

குடிநீர் பிரச்சனைக்காக ஜூன் 22 முதல் மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தண்ணீர் பிரச்சனையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும்.

உள்ளாட்சி துறை அமைச்சரின் அக்கறையற்ற தன்மையால் மக்கள் குடிநீரின்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் பஞ்சமே இல்லையென பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் வீண் வதந்திகளை பரப்புவதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க அமைச்சர் முயற்சி செய்கிறார். அமைச்சர் சொல்வது போல் நிலைமை இல்லை. தண்ணீர் பிரச்சனை தலை விரித்தாடுகிறது. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.