வேட்பாளர்கள் நேர்காணல். கழக அறிவிப்பு .

320
stain7.3.19

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட அக்கட்சியின் தலைமை கழகத்திற்கு விண்ணப்பம் செய்தவர்களை அக்கழகத்தின் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் வருகின்ற 10.3.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் சந்திப்பார் என்று அக்கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நேர்காணலின்போது அந்தந்த நாடாளுமன்றத் தொகுதியை சேர்ந்த மாவட்ட கழகச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய நகர பகுதி கழகச்செயலாளர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் தங்களுக்கான ஆதரவாளர்களையோ, பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது என்றும், நேர்காணலில் கண்டிப்பாக அவர்களை அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of