“என் கணவருக்கும்.. அந்த பெண்ணுக்கும்..” பகீர் கிளப்பிய திமுக நகர செயலாளர் மனைவி..

410

சென்னை அடையார் பகுதியை சேர்ந்த ரம்யாவுக்கும், வாணியம்பாடி திமுக நகர செயலாளர் சாரதிகுமாருக்கும் கடந்த 2016-ஆம் ஆண்டு திருமாணம் ஆகியுள்ளது. இந்நிலையில் தனது கணவர் சாரதிகுமார், வெறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதாகவும், அந்த பெண்ணுடன் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரம்யா புகார் அளித்துள்ளார்.

தான் மகப்பேறு காலத்தில் தான் தாய் வீட்டிற்கு சென்றிருந்தபோது, அந்த பெண்ணை வீட்டிற்கே அழைத்து வந்துள்ளதாக கணவர் மீது குற்றம் சாட்டும் ரம்யா, இது குறித்து திமுக தலைமையிடம் புகார் அளித்ததாகவும், இதனால் தன்னை கணவர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார்.

மேலும் தன்னுடைய நகைகள், பணம் ஆகியவற்றை பறித்து கொண்டு தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் மிரட்டல் விடுவதாகவும் ரம்யா புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வாணியம்பாடி திமுக நகர செயலாளர் சாரதிகுமாரிடம் கேட்டபோது, தனக்கும், தனது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரிய வழக்கு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், வழக்கு முடியும் தருவாயில் இருப்பதால், அதிக பணம் பெறுவதற்காகவே இந்த குற்றச்சாட்டை கூறி வருவதாக தெரிவித்தார்.

கட்சியில் நல்ல பொறுப்பில் செல்வாக்குடன் இருப்பதால், தன்னை பழிவாங்கும் நோக்கில் புகார் அளித்துள்ளதாக சாரதிகுமார் தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of