திமுக சார்பில் போட்டியிடுவோரின் விருப்பமனுக்களை பெற நாளை கடைசி நாள்

145

திமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்பமனுக்களை பெற இன்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்த நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும், 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கும் விருப்பமனுக்கள் பிப்ரவரி 25 ஆம் தேதியிலிருந்து வழங்கப்பட்டன. இந்த விருப்பமனுக்களை பெறுவதற்கு இன்று(07/03/19) கடைசி நாள் என திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருப்பமனுக்களுக்கான நேர்காணல் வரும் 9 மற்றும் 10 ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.