இடைத் தேர்தல் – திமுக வேட்பாளர் யார் என்பது நாளை மாலைக்குள் தெரியவரும்

300

விக்ரவாண்டியைச் சேர்ந்த, புகழேந்தி – மத்திய மாவட்ட பொருளாளர், மாவட்ட துணை செயலாளர் – ஜெயசந்திரன், ஒன்றிய செயலாளர் ரவி , மற்றும் ஜெயதுரை உள்ளிட்ட ஏராளமானோர் விருப்ப மனுக்களை வாங்கினர்.

பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை இன்று மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. விருப்பமனு அளித்தவர்களுக்கு நாளை நேர்காணல் நடத்தப்படும். இதனைத் தொடர்ந்து, நாளை மாலைக்குள் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே, விக்கரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உதயநிதி ஸ்டாலினும் விருப்ப மனு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of