உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது திமுக வழக்கு

402
sp-velumani

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்துள்ள மனுவுடன், வழக்கு தொடர்பாக 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, துறை சார்ந்த ஒப்பந்தங்களை உறவினருக்கு ஒதுக்கீடு முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த மாதம் 10 ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தும்,இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மனுவில் கூறியுள்ளார்.

எனவே, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரியும், 2011 முதல் 2015-ம் ஆண்டு வரை கோவை மாவட்டத்தில் எஸ்.பி. வேலுமணி செய்த ஊழல் தொடர்பான 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆணவங்களையும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்துள்ளார்.