வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக திமுக தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

622

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கைகளில் முறைகேடு நடப்பதாக திமுக சார்பில் தொடரப்பட்ட அவசர வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் சத்தியநாராயணன், ஆதிகேசவலு;

வாக்கு எண்ணிக்கை விரைவாக நடக்கிறது என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்யவேண்டுமெனவும், வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்கிறதா என்பது குறித்து முழு அறிக்கையை தேர்தல் ஆணையம் சமர்ப்பிக்கவேண்டுமெனவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க போதிய பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.