கருணாநிதியை சுட்டிக்காட்டி.. 27 வயது பெண்ணை மணந்த 67 வயது திமுக நிர்வாகி..

8345

திருவண்ணாமலை மாவட்டம் சாவல் பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரேசன். 67 வயதான இவர், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் முக்கிய நிர்வாகியாக இருந்து வருகிறார்.

சுந்தரேசனுக்கும், பட்டிமன்ற பேச்சாளர் அபிதா என்ற 27 வயது பெண்ணிற்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் காதலாக மாறிய நிலையில், இருவரும் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.

மகள் வயதில் இருக்கும் பெண்ணை சுந்தரேசன் திருமணம் செய்துக்கொண்டுள்ள சம்பவம், அப்பகுதி திமுக நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பேசிய சுந்தரேசன், பெரியாரும், கருணாநிதியும் தங்களது வயதான காலத்தில், உதவிக்காக திருமணம் செய்துக்கொண்டனர். அதேபோல் தான், நானும் அபிதாவின் அனுமதியுடன் அவரை திருமணம் செய்துக்கொண்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.