வாக்கு சேகரிக்க அதிமுக பணம் வழங்குகிறது! தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்!

422

கஜா புயலின் தாக்கத்தினாலும், பருவ மழை பொய்த்ததன் காரணமாகவும் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கடந்த 11-ந்தேதி அறிவித்தார்.

இதுபற்றி இந்திய தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார் மனு அளித்துள்ளது.

அக்கட்சி சார்பில் அதன் அமைப்பு செயலாளரான ஆர்.எஸ்.பாரதி அளித்துள்ள மனுவில், வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு வழங்கப்படுவதாக கூறி, ஆளுங்கட்சியினர் வாக்கு சேகரிப்புக்காக ரூ.2,000 அளித்து வருகின்றனர்.

இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of