காங்கிரஸுக்கு எந்தெந்த தொகுதி? – அண்ணா அறிவாலயத்தில் விறுவிறு பேச்சுவார்த்தை

126

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த தொகுதிகள் என பங்கீடு செய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.

இதன் பிறகு எந்தெந்த தொகுதியில் காங்கிரஸ் களமிறங்குகிறது என்ற விபரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.