தூத்துக்குடி கலவர பூமியை போல் தோற்றத்தை திமுக உருவாக்குகிறது – தமிழிசை

359

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக – பாஜக கூட்டணி தொடர வேண்டும் என்பது தனது விருப்பம் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டியில்; நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால், மோடியை மக்கள் நம்புகிறார்கள்.

4 மற்றும் 5 ஆவது கட்டத் தேர்தல்களிலும் மோடிக்கே மக்கள் வாக்களிப்பார்கள். தூத்துக்குடியிலும் தாமரை வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை நீதிமன்றத்திற்கு சென்று நிறுத்தியது திமுகதான். உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்.

உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக – பாஜக கூட்டணி தொடர வேண்டும் என்பது எனது விருப்பம். தூத்துக்குடியில் துப்பாக்கி கலாச்சாரம் உள்ளது என நீதிபதியே கருத்து தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி என்றால் கலவர பூமி என்ற தோற்றத்தை ஏற்படுத்த திமுகவினரும் காங்கிரஸாரும் முயற்சி செய்துள்ளனர். அதை துடைத்தெறிய வேண்டும் என்பதற்காக தூத்துக்குடியில் போட்டியிட்டேன். மக்கள் விருப்பப்படாத எந்தத் திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வராது என்றார் அவர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of