திமுக – தேமுதிக நேரடியாக மோதும் தொகுதிகள்

416

வடசென்னை, கள்ளக்குறிச்சி ஆகிய இரு மக்களவை தொகுதிகளில் திமுக- தேமுதிக நேரடியாக களம் காண்கின்றன.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அக்கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பை அதிமுக வெளியிட்டது. அதில் அக்கட்சியானது கள்ளக்குறிச்சி, திருச்சி, வடசென்னை, விருதுநகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளில் இரு தொகுதிகளான கள்ளக்குறிச்சி, வடசென்னையில் திமுக நேரடியாக களத்தில் உள்ளது.

என்னதான் கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகவையே மூன்றாம் இடத்துக்கு தள்ளிய கட்சி தேமுதிக என்றாலும் கூட அந்த புகழ் எல்லாம் 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலோடு போய்விட்டது.

கள்ளக்குறிச்சியில் தேமுதிகவுக்கு செல்வாக்கே இல்லை. பாமகவுக்குத்தான் செல்வாக்கு உள்ளதாம். எனவே இந்த இரு தொகுதிகளிலும் தேமுதிகவுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of