“தேர்தல் கதாநாயகன்”…திமுக தேர்தல் அறிக்கை வெளியானது

2313

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை நேற்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து இன்று தேர்தல் அறிக்கை வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அதன்படி இன்று திமுக தலைவர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தேர்தல் அறிக்கையை தேர்தல் கதாநாயகன் என ஸ்டாலின் புகழாரம். 130 பக்கங்களில் 500 திட்டங்களுடன் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 28 பக்கங்கள் கொண்ட முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. அதில்,

*திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
*ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்
*பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும்
*டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும்
*சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும்
*முதியோர் ஓய்வூதியம் 1500 ரூபாயாக உயர்த்தப்படும்
*அரசு வேலைகளில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு
*குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ 4000 வழங்கப்படும்
*கலைஞர் பெயரில் தமிழகம் முழுவதும் 500 உணவகம் அமைக்கப்படும்
*ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க ரூ 10000 உதவித் தொகை வழங்கப்படும்
*தொழில்நிறுவனங்களில் தமிழர்களுக்கு 75% வேலைவாய்ப்பு வழங்கப்படும்
*ஆட்சி அமைந்த முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வு ரத்து என சட்டம் நிறைவேற்றப்படும்
*பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் நலனுக்கு தனி ஆணையம் அமைக்கப்படும்
*பள்ளி மாணவர்களுக்கு காலையில் சத்துணவாக பால் வழங்கப்படும்
*எட்டாம் வகுப்பு வரை தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் இயற்றப்படும்
*மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்
*பெண்களுக்கு பேறு கால விடுமுறை 12 மாதங்களக உயர்த்தப்படும்
*கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்
*புதிதாக 200 தடுப்பணைகள் கட்டப்படும்
*மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 3 சக்கர மோட்டார் வாகனம் வழங்கப்படும்
*இந்து ஆலயங்களை புணரமைக்க 1000 கோடி நிதி ஒதுக்கப்படும்
*நகரப்பேருந்துகளில் பெண்கள் இலசவமாக பயணிக்கலாம்
*மசூதி மற்றும் தேவாலயங்களை புணரமைக்க 200 கோடி நிதி ஒதுக்கப்படும்
*மகளிர் சுய உதவிக்குழுக்களின் கூட்டுறவு சங்க கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்

போன்ற முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.Advertisement