திமுக முன்னாள் எம்.பி. வசந்தி ஸ்டான்லி காலமானார்

434

திமுகவைச் சேர்ந்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி சனிக்கிழமை காலமானார்.

இவர் 1962-ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் பிறந்தவர். திமுக மாநிலங்களவை உறுப்பினராக கடந்த 2008 முதல் 2014 -ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர். 56 வயதாகும் இவர், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சனிக்கிழமை இரவு காலமானார்.

எழுத்தாளர், பத்திரிகையாளர் என பன்முகத் திறமை உடையவர் வசந்தி ஸ்டான்லி. இவர் திமுகவின் செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of