விசிக விற்கு 1 தொகுதி? – பேச்சுவார்த்தைக்கு வராத திருமா

1038

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விசிக கட்சிக்கு 1தொகுதி ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுக- காங்கிரஸ் கூட்டணியில் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கூட்டணி உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொகுதி வழங்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன.

ஏற்கனவே திமுகவுடனான பேச்சுவார்த்தைக்கு நேற்று ஸ்டாலின் அழைத்த பொழுது திருமாவளவன் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதற்கு திருமாவளவன் கட்சி பணி இருந்ததால் வர முடியவில்லை என விளக்கமளித்திருந்தார்.

இந்த சூழலில் திமுக-விசிக உடனான பேச்சுவார்த்தை இன்று நடக்கவிருப்பதாகவும் விசிக விற்கு ஒரு தொகுதி வழங்க இருப்பதாகவும் தெரிகிறது.

ஆனால் விசிக சார்பில் 2 தொகுதிகள் கேட்டிருந்ததாகவும் ஆனால் திமுக அதற்கு உடன்படவில்லை. இந்த நிலையில் விசிக விற்கு 1 தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement