சகுனியும், துரியோதனனும் ஒன்று சேர்ந்தாலும் பாண்டவர்களை ஒன்றும் செய்யமுடியாது.

331

அமைச்சர் ஜெயக்குமார், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,

ஒரு கொள்கை, லட்சியம் கொண்டவர்களிடம் முரண்பாடு இருக்காது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் கொள்கை வழியில் நடப்பதால் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எந்த முரண்பாடும் கிடையாது.

கொறடா அளித்த புகாரின்பேரில் சபாநாயகர் நடவடிக்கை எடுத்து உள்ளார். கோர்ட்டுக்கு செல்ல மாட்டோம் என்று கூறிவிட்டு இப்போது கோர்ட்டுக்கு சென்று உள்ளனர்.

தி.மு.க. சகுனி, சூழ்ச்சி வேலை செய்வது வழக்கம். அ.தி.மு.க.வினர் பாண்டவர்கள் என்பதால் எங்களுக்கு சூழ்ச்சி எதுவும் தெரியாது. அ.ம.மு.க. துரியோதனன். தற்போது துரியோதனன் கும்பலும், சகுனி கும்பலும் சேர்ந்து உள்ளனர். இவர்களால் பாண்டவர்கள் கும்பலை ஒன்றும் செய்ய முடியாது. பாண்டவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்று கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of