பெண்கள் மீது கால் பட்ட விவகாரம் – திமுக நிர்வாகி கைது..!

926

சூலூர் அருகே திமுக அலுவலகத்தில் இருந்த திமுக செயற்குழு உறுப்பினர் சந்திரன் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் வட்டம் இருகூர் பேரூராட்சி பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக பேரூராட்சி தலைவராக இருந்தவர் சந்திரன். இவர் நேற்று மாலை சுமார் 8 மணியளவில் சூலூர் திமுகவின் அலுவலகத்திற்கு வந்தபோது, ரயில்வே போலீசார் மற்றும் சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் வைத்து சந்திரனை கைது செய்தனர்.

கடந்த 8-ஆம் தேதி சந்திரன் சென்னையில் நடைபெற்ற திமுக நேர்காணலுக்கு சென்றுவிட்டு கோவை திரும்பும் வழியில் ரயிலில் பயணம் செய்யும்போது அதே பெட்டியில்பயணம் செய்த பெண்களின் மீது அவரின்கால் தவறுதலாக பட்டதாக தெரிகிறது.

அந்த பெண்கள் கூச்சலிடவே அதே பெட்டியில் இருந்த பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி உள்ளார். அப்போது இந்த சம்பவம் தொடர்பாக சந்திரன், சன் ராஜேந்திரன் மற்றும் மூன்று பேர் ரயில்வே போலீஸாரிடம் எழுதிக்கொடுத்துவிட்டு சமாதானம் செய்துவிட்டு கோவை வந்துள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளதாக கூறி, சேலம் ரயில்வே போலீசார் சூலூர் வந்து திமுக செயற்குழு உறுப்பினர் ஆர். சந்திரனை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

தேர்தல் தற்போது பிரச்சாரம் மும்மரமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் இவ்வாறு திமுக செயற்குழு உறுப்பினர் கைது செய்தது திமுகவினரிடையே பெரும் எதிர்ப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி சுல்தான்பேட்டை சேர்ந்த திமுகவின் முக்கிய நபர் வேலுச்சாமி கூறும்போது, இது பொய் புகார் எனவும் அரசியல் சதி எனவும் கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of