வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்த திமுக பிரமுகர் மகள்..! – காவல் நிலையத்தில் தஞ்சம்..!

664

சென்னை பூந்தமல்லி ஸ்ரீ வித்தியா கணபதி தெருவில் வசித்து வருபவர் நிதர்சனா. இவரும் சேஷா நகரை சேர்ந்தவருமான மைக் ரிச்சர்ட்சன் ஆகிய இருவரும் நேற்று திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைத்து காதல் திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் தங்களுக்கு பாதுகாப்பு கோரி திருப்பரங்குன்றம் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக நிதர்சனாவை காணவில்லை என அவரது பெற்றோர் பூந்தமல்லி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இதையடுத்து புந்தமல்லி காவல்நிலைய போலீஸார், மதுரை திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு சென்று நிதர்சனாவை அழைத்து செல்ல வந்தனர்.ஆனால் தங்களுக்கு சென்னை சென்றால் ஆபத்து இருப்பதாகக் கூறி, புதுமணத்தம்பதிகள் இருவரும் சென்னை போலிசாருடன் செல்லவில்லை என்று தெரிகிறது.

இதனைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் மகளிர் காவல்நிலையத்திலிருந்து , திருப்பரங்குன்றம் காவல்நிலையத்திற்கு நிதர்சனா – மைக்ரிச்சர்ட்சன் குறித்த வழக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது. தற்போது இருவரிடமும் போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை திருவள்ளுவர் மாவட்ட தெற்கு தொகுதி துணை மாவட்ட செயலாளராக இருப்பவர் நிதர்சனாவின் தாயார் காயத்ரி ஸ்ரீராம். தன்னை வீட்டில் வைத்து கொலை செய்ய முயன்றதாக நிதர்சனா தாயார் மீது புகார் தெரிவித்திருந்தது குறுப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of