பனை ஓலையா? பானை ஓலையா? பாவம் அவரே கன்புயுஸ் ஆயிட்டாரு!

709

இன்னும் சில நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அரசியல்வாதிகள், உளறிவருவது சகஜமாகி உள்ளது.

மாற்றுக் கட்சிக்கு ஓட்டுக்கேட்பது, தங்கள் கட்சியின் சின்னத்தை மாற்றிக் கூறுவது என பல்வேறு வகைகளில் அரசியல் கட்சியின் தலைவர்கள் உளறிக்கொட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வரிசையில் திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலின் இடம் பெற்றுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவாக, சிதம்பரம் தொகுதியில் ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், பனை ஓலைகளில் எழுதுவது என்பதற்கு பதிலாக பானை ஓலைகளில் எழுதுவது என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of