வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் நடந்து சென்று வாக்கு சேகரித்தார் ஸ்டாலின்

823

திருப்பூர் உழவர் சந்தை மற்றும் ரயில் நிலையம் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் நடந்து சென்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார்.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடுகின்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து பெருமாநல்லூரில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது, இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருப்பூர் வந்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், இன்று காலை திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தையில் வியாபாரிகள்,விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் நடந்து சென்று வாக்கு சேகரித்தார் .

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வேட்பாளர் சுப்பராயன் ஆகியோர் ஸ்டாலினுடன் வாக்கு சேகரித்தார் . பின்னர் ரயில் நிலையம் பகுதியில் உள்ள ஓட்டலில் மு.க ஸ்டாலின் வேட்பாளர் மற்றும் முத்தரசன் ஆகியோருடன் தேநீர் அருந்தினர். மேலும் அங்கிருந்த தொண்டர்களுடன் கை குலுக்கி செல்பி எடுத்துக்கொண்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of