நல்லாட்சிக்கு முன்னோட்டம் உள்ளாட்சித் தேர்தல்” – தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

210

நல்லாட்சிக்கு முன்னோட்டம் தரும் உள்ளாட்சித் தேர்தலில், முறைகேடுகளுக்கு அதிகாரிகள் இடம் தர மாட்டார்கள் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தேர்தல் பணியில் உள்ள மாவட்ட ஆட்சியர் தொடங்கி அனைத்து அதிகாரிகள் மீதும் தி.மு.க.வுக்கு நம்பிக்கை இருக்கிறது என்றும் அவர்கள் கடமை தவறாமல் தங்கள் ஜனநாயகப் பணியை பயமின்றி பாரபட்சமின்றி நிறைவேற்றிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அலட்சியம் காட்டினால் அதனால் விளைகின்ற சீர்கேடுகள், பொதுமக்களுக்கு மட்டுமின்றி அதிகாரிகளுக்கும் அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் பாதிப்பை உண்டாக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின் உள்ளாட்சி அமைப்புகளில் முறைகேடான தேர்தல் நடந்தால் அது மாநிலம் முழுவதும் புற்றுநோய்போல பரவிவிடும் என்றும் அதற்கு அதிகாரிகள் இடம் கொடுக்க மாட்டார்கள் எனப் பெரிதும் நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of