இடைத்தேர்தலின் போது ஜெ., உயிருடன் இருந்தாரா? ஸ்டாலின்!

451

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்த வழக்கில், அதிமுக வேட்பாளரின் வெற்றி செல்லாது என்று சமீபத்தில் சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பில் ஜெயலலிதாவின் கைரேகை சந்தேகத்திற்கு இடமாக இருப்பதால் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த தீர்ப்பை சுட்டிக் காட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த தீர்ப்பின் மூலம் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட ஆவணத்தில் இருந்தது ஜெயலலிதாவின் கைரேகை அல்ல என்பது உறுதியாகியிருப்பதாகவும், இதனால் இடைத்தேர்தலின்போது அவர் உயிருடன் இருந்தாரா? என்ற கேள்வி தற்போது எழுந்திருப்பதாகவும் கூறினார்.

மேலும் பதவியில் இருந்த ஒரு முதலமைச்சரின் மரணத்தில் மர்மம் இருப்பதால், உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of