பெண்ணை தாக்கிய திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கைது, கட்சியில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டார்

592

பெரம்பலூரில் அழகு நிலைய பெண்ணை தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் காலால் எட்டி உதைக்கும் வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப்பில் வெளியானதையடுத்து போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூரில் அழகு நிலையம் நடத்தி வரும் சத்யா என்பவர் திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வகுமாருடன் தொடர்பு வைத்து கொண்டு பல லட்சங்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை பெற்று கொண்ட சத்தியா வேறு இடத்திலும் அழகு நிலையம் திறந்து வைத்துள்ளார்.

இதற்கிடையே சத்யா திமுக நகர தலைவர் பிரபாகரன் என்பவருடன் தொடர்பு கொண்டு செல்வகுமாரை கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த செல்வகுமார் தான் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். அப்போது பிரபாகரனுடன் வைத்துள்ள தவறான உறவு பற்றி கேட்டு சத்யாவை அடித்துள்ளர்.

இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்காததால் தாக்கப்பட்ட CCTV கேமரா பதிவை பிரபாகரன் வெளியிட்டார். இந்நிலையில் அழகு நிலையத்திற்குள் புகுந்து பெண்ணை தாக்கிய முன்னால் மாவட்ட கவுன்சிலர் செல்வகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, செல்வகுமார் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யபட்டுள்ளார். கட்சிக்கு அவப் பேயரை ஏற்படுத்தியதால் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்படுள்ளதாக திமுக தெரிவித்துள்ளது.