திமுக – மதிமுக தொகுதி உடன்பாட்டில் சிக்கல்? – இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

548

தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்றும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க-வுடன் தொகுதி பங்கீடு குறித்து ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் நேற்று 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு தொடர்பாக உடன்பாடு எட்டப்படவில்லை.

இதனால் தி.மு.க கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்றும் தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

இன்றைய பேச்சுவார்த்தையில் இரு கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of