“இனி திருநங்கைகள்..,” திமுக பொதுக்குழு கூட்டம்..! நிறைவேற்றப்பட்ட அதிரடி தீர்மாணம்..!

340

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், கட்சி விதிகளில் சீர்திருத்தம் செய்யப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் அக்டோபர் மாதம் தொடக்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் காரணமாக பொதுக்குழு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இடைத்தேர்தல் முடிந்து தி.மு.க கூட்டணி தோல்வியை தழுவிய நிலையில், தி.மு.க பொதுக் குழுக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெற்றது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில், மறைந்த திமுக உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. திருநங்கைகளை திமுகவில் சேர்ப்பதற்கு கட்சி விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக அமைப்புத் தேர்தலை அடுத்த ஆண்டுக்குள் நடத்தி முடிக்கவும், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் வரை, திமுக நிர்வாகிகள் அதே பொறுப்பில் நீடிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இணையதளம் மூலம் திமுக உறுப்பினர்களை சேர்க்கவும், வெளிநாடு வாழ் இந்தியர்களை திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்கவும், திமுக இளைஞரணி உறுப்பினர்களுக்கான வயது வரம்பு 18-35 வரை நிர்ணயித்தும் கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.

மேலும் திமுக மருத்துவர் அணி என்பது மருத்துவ அணி என பெயர் மாற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7பேரை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of