திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

55

சென்னை அடுத்த வண்டலூர் மண்ணிவாக்கத்தில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான சண்முகம் வீட்டிற்கு அதிகாலையில் வந்த மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதையடுத்து அங்கு ஏராளமான திமுகவினர் குவிந்தனர்.இது குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு அரசியல் முன்விரோதம் காரணமா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்