“இவர் இப்படி செஞ்சிட்டாரே!” ஸ்டாலினிடம் கோபித்துக்கொண்ட நிர்வாகிகள்!

832

அரவக்குறிச்சி தொகுதிக்கு பொன்முடி தலைமையிலும், ஒட்டப்பிடாரத்துக்கு கே.என்.நேரு தலைமையிலும், இதேபோல் திருப்பரங்குன்றம், சூலூருக்கு இ.பெரியசாமி, எ.வ.வேலு தலைமையில் குழுவை அமைத்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

கடந்த ஒரு மாதமாக பிரச்சாரப் பணி மேற்கொண்டு அயர்ந்து போனதால், அவர்கள் அணைவரும் ஓய்வு எடுக்க முடிவு செய்திருந்தார்களாம். இந்நிலையில் தேர்தல் பொறுப்பாளர்கள் என அனைத்து மாவட்டங்களிலும் ஒன்றியச்செயலாளர்கள் வரை பணி ஒதுக்கப்பட்டுள்ளதால் யாரும் நகர முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இதனால் ஸ்டாலின் மீது அனைவரும் செல்லமாக கோபித்துக்கொண்டுள்ளனர். மேலும் இது ஒரு பொருட்டு இல்லை என்றும், தங்களது முக்கிய குறிக்கோள் ஆட்சிமாற்றம் தான், அதற்கான பணிகளில் எனக்கும் பங்களிப்பு வழங்கிய ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of