தமிழ் வெல்லும் என்று டுவீட் போட்ட எம்பி! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! ஏன் தெரியுமா..?

689

ஸ்வச்சதா அப்யான் – தூய்மை இயக்கம் குறித்த தகவல், நாடாளுமன்ற அவை வளாகத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியது. அந்த அறிவிப்பில், ஜூலை 13, 14 சனி, ஞாயிறுகளில் நாடாளுமன்ற அவைத்தலைவர் முன்னிலையில், மகாத்மா காந்தி சிலை அருகே கூடுமாறும், காலை 9 மணி தொடங்கி 10.30 வரை நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பு ஹிந்தியில் மட்டும் வெளியிடப்பட்டிருந்தது. இதனால் திமுக எம்.பி. ரவிக்குமார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனால் அந்த அறிவிப்பு இந்தியிலும், ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் எம்.பி.ரவிக்குமார் அவரது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் செய்துள்ளார். அதில் கூறியிருப்பது பின்வருமாறு:-

“கோரிக்கைக்கு வெற்றி

சபாநாயகர் காலையில் இந்தியில் அனுப்பிய கடிதத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இன்று பிற்பகலில் அக்கடிதம் மக்களவையில் ஆங்கிலத்திலும் இந்தியிலுமாக உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.

வெல்லும் தமிழ் !”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

ஆங்கிலத்தில் அறிவிப்பு வெளியாகியதால், தமிழ் எப்படி வெல்லும் என்று பலரும் இந்த டுவீட்டை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Advertisement